Kural 781
குறள் 781
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு
seyatrkariya yaavula natpin athupol
vinaikkariya yaavula kaappu
Shuddhananda Bharati
Like friendship what's so hard to gain?
That guards one against acts villain?
GU Pope
What so hard for men to gain as friendship true?
What so sure defence 'gainst all that foe can do?
What things are there so difficult to acquire as friendship ? What guards are there so difficult tobreak through by the efforts (of one's foes) ?
Mu. Varadarajan
நட்பைப்போல் செய்துகொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன? அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன?
Parimelalagar
நட்பின் செயற்கு அரிய யா உள: நட்புப்போலச் செய்து கோடற்கு அரிய பொருள்கள் யாவை உள? அதுபோல் வினைக்கு அரிய காப்பு யா உள - செய்து கொண்டால் அது போலப் பகைவர் செய்யும் வினைக்குப் புகற்கு அரிய காவலாவன யாவை உள? நட்புச் செய்தற்கு ஆவாரைப் பெறுதலும், பெற்றால் செய்யும் உபாயமும், செய்தால் திரிபின்றி நிற்றலும் முதலிய அரிய ஆகலின், 'நட்பிற் செயற்கு அரியன இல்லை' என்றும், செய்தால் பகைவரஞ்சி வினை தொடங்காராகலின், 'அதுபோல வினை வாராமைக்கு அரிய காவல் இல்லை' என்றும் கூறினார்.
விளக்கம்:
(நட்புத்தான் இயற்கை செயற்கை என இருவகைப்படும்: அவற்றுள் இயற்கை, பிறப்பு முறையானாயதூஉம், தேய முறையானாயதூஉம் என இரு வகைப்படும். அவற்றுள் முன்னையது சுற்றமாகலின், அது 'சுற்றந்தழா'லின் அடங்கிற்று. ஏனையது பகையிடையிட்ட தேயத்ததாகலின், அது துணைவலி என 'வலியறிதலுள்' உதவி பற்றி வருஞ் செயற்கையே யாகலின், அதன் சிறப்பு இதனாற் கூறப்பட்டது.)
Manakkudavar
நட்பாவது நட்பாமாறு கூறுதல். அமைச்சு, நாடு, அரண், பொருள், படை ஐந்துக்கூறினார் இனி நட்பாமாறு கூறுகின்றார். பன்னருள் படையும் பொருளும் உள்ளிட்ட நிலைநின்று வளர்வதும் இனநலன் அழிவு பெறாத நட்பையுடைய வனுக்கு அல்லது கூடாதாதலின், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) நட்புப்போல் உண்டாக்குதற்கு அரியவான பொருள்கள் யாவை யுள்? அவ்வாறு உண்டாக்கப்பட்ட நட்புப்போல், பிறர் நல்வினை செய்தற்கு அரிய வாகக் காக்கும் காவல்கள் யாவையுள்? (எ - று.) இது நட்புத் தேட வரிது என்றது.