குறள் 780

படைச்செருக்கு

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து

purandhthaarkan neermalkach saakitrpin saakkaadu
irandhthukoal thakkathu utaiththu


Shuddhananda Bharati

Military pride

Such a death shall be prayed for
Which draws the tears of the ruler.


GU Pope

Military Spirit

If monarch's eyes o'erflow with tears for hero slain,
Who would not beg such boon of glorious death to gain?

If (heroes) can so die as to fill with tears the eyes of their rulers, such a death deserves to be obtainedeven by begging.


Mu. Varadarajan

தம்மைக்‌ காத்த தலைவருடைய கண்கள்‌ நீர்‌ பெருக்குமாறு சாகப்‌ பெற்றால்‌, சாவு இரந்தாவது பெற்றுக்‌ கொள்ளத்‌ தக்க பெருமை உடையதாகும்‌.


Parimelalagar

புரந்தார்கண் நீர் மல்கச் சாகிற்பின் - தமக்குச் செய்த நன்றிகளை நினைந்து ஆண்ட அரசர் கண்கள் நீர்மல்கும் வகை போரிடைச் சாவப் பெறின்; சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து - அச்சாக்காடு இரந்தாயினும் கொள்ளுந் தகுதியை உடைத்து.
விளக்கம்:
(மல்குதலாகிய இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. கிளை அழ இல்லிடை நோயால் விளிவார் பழவினைப் பயனே யெய்தலின், அடுத்த வினையால், துறக்கமெய்தும் சாதலை 'இரந்துகோள் தக்கது உடைத்து' என்றார். இவை நான்கு பாட்டானும் உயிர் ஓம்பாமை கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) தம்மை ஆண்டவரது கண் நீர்மல்குமாறு சாகவல்லாராயின், அச்சாக்காடு எல்லாரானும் வேண்டிக் கொள்ளும் தகுதியுடைத்து,
(என்றவாறு). இஃது ஆண்டவனுக்குக் கேடுவரின், படவேண்டுமென்றது. பொருளியல் முற்றிற்று.