குறள் 779

படைச்செருக்கு

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்

ilaiththathu ikavaamaich saavaarai yaarae
pilaiththathu orukkitr pavar


Shuddhananda Bharati

Military pride

Who will blame the heroes that lose
Their lives in war to keep their vows?


GU Pope

Military Spirit

Who says they err, and visits them scorn,
Who die and faithful guard the vow they've sworn?

Who would reproach with failure those who seal their oath with their death ?


Mu. Varadarajan

தாம்‌ உரைத்த சூள்‌ தவறாதபடி போர்செய்து சாகவல்லவரை, அவர்‌ செய்த பிழைக்காகத்‌ தண்டிக்க வல்லவர்‌ யார்‌?


Parimelalagar

இழைத்தது இகவாமைச் சாவாரை-தாம் கூறின வஞ்சினம் தப்பாமைப் பொருட்டுச் சென்று சாவ வல்ல வீரரை பிழைத்தது ஒறுக்கிற்பவர் யார்-அது தப்பியவாறு சொல்லி எள்ளுதற்குரியார் யாவர்?
விளக்கம்:
(இழைத்தல்: இன்னது செய்யேனாயின் இன்னானாகுக எனத் தான் வகுத்தல். 'சொல்' என்பது அவாய் நிலையான் வந்தது. வஞ்சின முடிப்பான் புக்கு முன்னே சாவினும் தொலைவன்மையின், அது முடித்தாராவர் எனச் சாதற் சிறப்பு கூறியவாறு.)


Manakkudavar

(இதன் பொருள்) முற்கூறிய வஞ்சினம் தப்பாமல் சாவாரை அவர் தப்பியது சொல் லிப் பழிக்கவல்லவர் யாவர்,
(என்றவாறு). இது வஞ்சினம் தப்பின் படவேண்டுமென்றது.