குறள் 778

படைச்செருக்கு

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்

urinuyir anjsaa maravar iraivan
serinum seerkunral ilar


Shuddhananda Bharati

Military pride

The king may chide, they pursue strife;
They fear loss of glory; not life.


GU Pope

Military Spirit

Fearless they rush where'er 'the tide of battle rolls’;
The king's reproof damps not the ardour of their eager souls.

The heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour, even if theking prohibits (their fighting).


Mu. Varadarajan

போர்‌ வந்தாலும்‌ உயிரின்‌ பொருட்டு அஞ்சாமல்‌ போர்‌ செய்யத்‌ துணியும்‌ வீரர்‌, அரசன்‌ சினந்தாலும்‌ தம்முடைய சிறப்புக்‌ குன்றாதவர்‌ ஆவார்‌.


Parimelalagar

உறின் உயிர் அஞ்சா மறவர்-போர்பெறின் தம்முயிர்ப் பொருட்டு அஞ்சாது அதன்மேற் செல்லும் வீரர்; இறைவன் செறினும் சீர்குன்றல் இவர்-தம் இறைவன் அது வேண்டா என்று முனியினும் அவ் வீரமிகுதி குன்றார்.
விளக்கம்:
(போர் பெற்று அறியாமையின், அது பெற்றால் அரசன் தடுப்பினும் நில்லார் என்பதாம். பிறரும் 'போரெனிற்புகலும் புனைகழல் மறவர்" [புறநா. 31] என்றும், "புட்பகைக்கு ஏவானாகலின் சாவேம்யாம் என நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப" [புறா. 68] என்றும் கூறினார்.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒன்று உற்ற காலத்து உயிர்ப்பொருட்டு அஞ்சாத மறவர் தமமரச னால் செறுக்கப்பட்டாராயினும், தமது தன்மை குன்றுதல் இலர்,
(என்றவாறு). இஃது அஞ்சாமையுடையார் வீரியஞ் செய்யுமிடத்துக் குறைய நில்லாமை வேண்டுமென்றது.