குறள் 776

படைச்செருக்கு

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து

viluppun pataathanaal yellaam valukkinul
vaikkumthan naalai yeduththu


Shuddhananda Bharati

Military pride

The brave shall deem the days as vain
Which did not battle-wounds sustain.


GU Pope

Military Spirit

The heroes, counting up their days, set down as vain
Each day when they no glorious wound sustain.

The hero will reckon among wasted days all those on which he had not received severe wounds.


Mu. Varadarajan

வீரன்‌ கழிந்த தன்‌ நாட்களைக்‌ கணக்கிட்டு விழுப்புண்‌ படாத நாட்களை எல்லாம்‌ பயன்படாமல்‌ தவறிய நாட்களுள்‌ சேர்ப்பான்‌.


Parimelalagar

தன் நாளை எடுத்து-தனக்குச் சென்ற நாள்களையெடுத்து எண்ணி; விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள் வைக்கும்-அவற்றுள் விழுப்புண் படாத நாள்களையெல்லாம் பயன்படாது கழிந்த நாளுள்ளே வைக்கும், வீரன்,
விளக்கம்:
(விழுப்புண்: முகத்தினும் மார்பினும் பட்ட புண். போர் பெற்றிருக்கவும், அது பெறாத


Manakkudavar

(இதன் பொருள்) தனது வாழ்நாளாகியநாளை யெண்ணி, அவற்றுள் விழுமிய புண் படாத நாளெல்லாவற்றையும் தப்பின நாளுள்ளே யெண்ணி வைக்கும் வீரன். () இது போரின்கண் முகத்தினும் மார்பினும் புண்படலும், முதுகு புறங் கொடாமையும் வேண்டு மென்றது.