குறள் 775

படைச்செருக்கு

விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு

viliththakan vaelkon taeriya aliththimaippin
otdanno vanka navarkku


Shuddhananda Bharati

Military pride

When lances dart if heroes wink
"It is a rout" the world will think.


GU Pope

Military Spirit

To hero fearless must it not defeat appear,
If he but wink his eye when foemen hurls his spear.

Is it not a defeat to the valiant to wink and destroy their ferocious look when a lance in cast at them(by their foe) ?


Mu. Varadarajan

பகைவரைச்‌ சினந்து நோக்கிய கண்‌, அவர்‌ வேலைக்‌ கொண்டு எறிந்தபோது மூடி இமைக்குமானாலும்‌, அது வீரமுடையவர்க்குத்‌ தோல்வி அன்றோ?


Parimelalagar

விழித்த கண்-பகைவரை வெகுண்டு நோக்கிய கண்; வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின்-அவர் வேலைக்கொண்டு எறிய அஃது ஆற்றாது அந்நோக்கை அழித்து இமைக்குமாயின்; வன்கணவர்க்கு ஒட்டு அன்றோ- அது வீரர்க்குப் புறங்கொடுத்தலாம்.
விளக்கம்:
(அவ்வெகுளி நோக்கம் மீட்டலும் போரின்கண் மீட்சி எனக்கருதி அதுவும் செய்யார் என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) மாற்றாரோடு எதிர்த்துச் சிவந்து நோக்கின கண்ணிலே ஒரு வேலினாலே எறிய, அதற்கு மீண்டும் இமைப்பாராயின், அஃது அஞ்சாதார்க்குக் கெட்டதனோடு ஒக்கும்,
(என்றவாறு). விழித்தகண் என்பதற்கு மாற்றானை நோக்கி யிமையாத கண் எனினும் அமையும்.