குறள் 773

படைச்செருக்கு

பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு

paeraanmai yenpa tharukanon rutrrakkaal
ooraanmai matrrathan yekhku


Shuddhananda Bharati

Military pride

Valour is fight with fierce courage
Mercy to the fallen is its edge.


GU Pope

Military Spirit

Fierceness in hour of strife heroic greatness shows;
Its edge is kindness to our suffering foes.

The learned say that fierceness (incontest with a foe) is indeed great valour; but to become abenefactor in case of accident (to a foe) is the extreme (limit) of that valour.


Mu. Varadarajan

பகைவரை எதிர்க்கும்‌ வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர்‌; ஒரு துன்பம்‌ வந்தபோது பகைவர்க்கும்‌ உதவி செய்தலை அந்த ஆண்மையின்‌ கூர்மை என்று கூறுவர்‌.


Parimelalagar

தறுகண் பேராண்மை என்ப-பகைவர்மேற் கண்ணோடாது செய்யும் மறத்தை நூலோர் மிக்க ஆண்தன்மையென்று சொல்லுவர்; ஒன்று உற்றக்கால் ஊராண்மை அதன் எஃகு [என்ப]-அவர்க்கு ஒரு தாழ்வு வந்ததாயின், கண்ணோடி அது தீர்த்துக்கோடற் பொருட்டு ஊராண்மை செய்தலை நூலோர் அதற்குக் கூர்மை என்று சொல்லுவர்.
விளக்கம்:
('என்ப' என்பது பின்னும் இயைந்தது. ஊராண்மை-உபகாரியாம் தன்மை. அஃதாவது, இலங்கையர் வேந்தன் போரிடைத் தன் தானை முழுதும்படத் தமியனாய் அகப்பட்டானது நிலைமை நோக்கி, அயோத்தியர் இறை மேற்செல்லாது, 'இன்று போய் நாளை நின் தானையோடு வா,' என விட்டாற்போல்வது. இவை இரண்டு பாட்டும் தழிஞ்சி. [பு.வெ.மா. வஞ்சி. 3])


Manakkudavar

(உள்.) ஒன்று உற்றக்கால் அஞ்சாமையை ஒருவனுக்குப் பெரிய ஆண்மை யென்று சொல்லுவர்; உலகியலறிந்து செய்தலை அவ்வாண்மைக்குப் படைக் கலமென்று சொல்லுவர்,
(என்றவாறு) உலகியலறிவது - தான் உலகியலை வெளியார் சொல்லாமை யறிதல்.