குறள் 771

படைச்செருக்கு

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்

yennaimun nillanmin thaevvir palaraennai
munninru kalnin ravar


Shuddhananda Bharati

Military pride

Stand not before my chief, O foes!
Many who stood, in stones repose.


GU Pope

Military Spirit

Ye foes! stand not before my lord! for many a one
Who did my lord withstand, now stands in stone!

O my foes, stand not before my leader; (for) many are those who did so but afterwards stood (in theshape of) statues.


Mu. Varadarajan

பகைவரே! என்னுடைய தலைவன்முன்‌ எதிர்த்து நிற்காதீர்கள்‌; என்னுடைய தலைவன்முன்‌ எதிர்த்து நின்று மடிந்து கல்வடிவாய்‌ நின்றவர்‌ பலர்‌.


Parimelalagar

தெவ்விர் என் ஐ முன் நின்று கல் நின்றவர் பலர்-பகைவீர், இன்று இங்கு என் தலைவன் எதிர் போரேற்று நின்று அவன் வேல்வாய் வீழ்ந்து பின் கல்லின்கண்ணே நின்ற வீரர் பலர்; என் ஐ முன் நில்லன்மின்-நீவிர் அதன்கணின்றி நும் உடற் கண் நிற்றல் வேண்டின் என் தலைவனெதிர் போரேற்று நிற்றலை ஒழிமின்.
விளக்கம்:
('என் ஐ' எனத் தன்னோடு தொடர்பு படுத்துக் கூறினமையின், அவன் வேல்வாய் வீழ்தல் பெற்றாம். கல்-நடுகல். ''நம்பன் சிலை வாய் நடக்குங்கணை மிச்சில் அல்லால் - அம்பொன் முடிப்பூண் அரசுமிலை [சீவக காந்தருவ. 317] எனப் பதுமுகன் கூறினாற் போல, ஒரு வீரன், தன் மறம் அரசன்மேல் வைத்துக் கூறியவாறு. இப்பாட்டு 'நெடுமொழி வஞ்சி' [பு.வெ.மா.வஞ்சி. 1


Manakkudavar

படைச்செருக்காவது படையினது வீரியங் கூறுதல். இது படைக்கு இன்றியமை-யாமையின், அதன்பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) என்னுடைய ஐயன் முன்னர்ப் பகைவீரரே! நில்லா தொழிமின்; முன்னாள் இவன் முன்னே நின்று, கல்லிலே யெழுத்தப்பட்டு நிற்கின்றார் பலராத லால்,
(என்றவாறு). இஃது எளியாரைப் போகச் சொல்லி, எதிர்ப்பாரோடு பொரவேண்டும் மென்றது.