குறள் 770

படைமாட்சி

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்

nilaimakkal saala utaiththaeninum thaanai
thalaimakkal ilvali il


Shuddhananda Bharati

The glory of army

With troops in large numbers on rolls
Army can't march missing gen'rals.


GU Pope

The Excellence of an Army

Though men abound, all ready for the war,
No army is where no fit leaders are.

Though an army may contain a large number of permanent soldiers, it cannot last if it has nogenerals.


Mu. Varadarajan

நெடுங்காலமாக நிலைத்திருக்கும்‌ வீரர்‌ பலரை உடையதே ஆனாலும்‌, தலைமை தாங்கும்‌ தலைவர்‌ இல்லாதபோது படைக்குப்‌ பெருமை இல்லையாகும்‌.


Parimelalagar

நிலை மக்கள் சால உடைத்து எனினும். போரின்கண் நிலையுடைய வீரரை மிக உடைத்தே யாயினும்; தலைமக்கள் இல்வழித் தானை இல்-தனக்குத் தலைவராகிய வீரர் இல்லாத வழித் தானை நில்லாது.
விளக்கம்:
(படைத்தலைவர் நிலையுடையரன்றிப் போவாராயின், காண்போர் இல்லெனப் பொராது தானும் போம் என்பார், 'தலைமக்கள் இல் வழி இல்' என்றார். இவை மூன்று பாட்டானும் முறையே படைத்தகையின்மையானும் அரசன் கொடைத் தாழ்வுகளானும், தலைவர் இன்மையானும் தாழ்வு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) படையானது நிலையுடைய வீரரைப் பெரிது உடைத்தாயினும், தனக்குத் தலைவரை இல்லாத விடத்துத் தனக்கு வெற்றியில்லையாம்,
(என்றவாறு). இது படையமைத்தாலும் படைத்தலைவரையும் அமைக்கவேண்டு மென் றது.