குறள் 769

படைமாட்சி

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை

sirumaiyum sellaath thuniyum varumaiyum
illaayin vaellum patai


Shuddhananda Bharati

The glory of army

Army shall win if it is free
From weakness, aversion, poverty.


GU Pope

The Excellence of an Army

Where weakness, clinging fear and poverty
Are not, the host will gain the victory.

An army can triumph (over its foes) if it is free from diminution; irremediable aversion and poverty.


Mu. Varadarajan

தன்‌ அளவு சிறிதாகத்‌ தேய்தலும்‌, தலைவரிடம்‌ நீங்காத வெறுப்பும்‌ வறுமையும்‌ இல்லாதிருக்குமானால்‌ அத்தகைய படை வெற்றிபெறும்‌.


Parimelalagar

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின்-தான் தேய்ந்து சிறிதாகலும், மனத்தினின்று நீங்காத வெறுப்பும், நல்குரவும் தனக்கு இல்லையாயின்; படைவெல்லும்-படை பகையை வெல்லும்.
விளக்கம்:
(விட்டுப் போதலும் நின்றது நல்கூர்தலும் அரசன் பொருள் கொடாமையான் வருவன. செல்லாத் துனியாவது: மகளிரை வௌவல், இளிவரவாயின செய்தல் முதலியவற்றான் வருவது. இவையுள் வழி அவன் மாட்டு அன்பு இன்றி உதறுப் பொராமையின், 'இல்லாயின் வெல்லும்' என்றார்.)


Manakkudavar

(இதன் பொருள்) தான் தேய்ந்து சிறிதாகவும், மனத்தினின்று நீங்காத வெறுப் பும், நல்குரவும் தனக்கில்லை யாயின், படை பகையை வெல்லும்,
(என்றவாறு)