குறள் 767

படைமாட்சி

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து

thaarthaangkich selvathu thaanai thalaivandhtha
porthaangkum thanmai arindhthu


Shuddhananda Bharati

The glory of army

Army sets on to face the foes
Knowing how the trend of war goes.


GU Pope

The Excellence of an Army

A valiant army bears the onslaught, onward goes,
Well taught with marshalled ranks to meet their coming foes.

That is an army which knowing the art of warding off an impending struggle, can bear against thedust-van (of a hostile force).


Mu. Varadarajan

தன்மேல்‌ எதிர்த்துவந்த பகைவரின்‌ போரைத்‌ தாங்கி, வெல்லும்‌ தன்மை அறிந்து, அவருடைய தூசிப்படையை எதிர்த்துச்‌ செல்லவல்லதே படையாகும்‌.


Parimelalagar

தலை வந்த போர் தாங்கும் தன்மை அறிந்து-மாற்றாரால் வகுக்கப்பட்டுத் தன்மேல் வந்த படையின் போரைவிலக்கும் வகுப்பு அறிந்து வகுத்துக்கொண்டு; தார் தாங்கிச் செல்வது தானை-அவர் தூசியைத் தன்மேல் வாராமல் தடுத்துத்தான் அதன்மேற்செல்வதே படையாவது.
விளக்கம்:
(படை வகுப்பாவது: வியூகம். அஃது எழுவகை உறுப்பிற்றாய், வகையான் நான்காய், விரியான் முப்பதாம். உறுப்பு ஏழாவன; உரம் முதல் கோடி ஈறாயின. வகை நான்காவன: தண்டம், மண்டலம், அசங்கதம், போகம் என இவை. விரி முப்பதாவன: தண்டவிரி பதினேழும், மண்டல விரி இரண்டும், அசங்கதவிரி ஆறும், போக விரி ஐந்தும் என இவை. இவற்றின் பெயர்களும் இலக்கணமும் ஈண்டு உரைப்பின் பெருகும். அவை எல்லாம் வடநூல்களுள் கண்டுகொள்க. இவை நான்கு பாட்டானும் படையினது இலக்கணம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) உற்றவிடத்து உற்ற போரினைத் தடுக்கும் இயல்பறிந்து, தாரைப் பொறுத்து, மேற்செல்லவல்லது படையாவது,
(என்றவாறு). இது முந்திச் செய்யவேண்டுமென்பதூஉம், செல்லுங்கால் இடமறிந்து செல்ல வேண்டுமென்பதூஉம், கூறிற்று.