குறள் 766

படைமாட்சி

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு

maramaanam maanda valichselavu thaetrram
yenanaankae yaemam pataikku


Shuddhananda Bharati

The glory of army

Manly army has merits four:-
Stately-march, faith, honour, valour.


GU Pope

The Excellence of an Army

Valour with honour, sure advance in glory's path, with confidence;
To warlike host these four are sure defence.

Valour, honour, following in the excellent-footsteps (of its predecessors) and trust-worthiness; thesefour alone constitute the safeguard of an army.


Mu. Varadarajan

வீரம்‌, மானம்‌, சிறந்த வழியில்நடக்கும்‌ நடக்கை, தலைவரால்‌ நம்பித்‌ தெளியப்படுதல்‌ ஆகிய நான்கு பண்புகளும்‌ படைக்குச்‌ சிறந்தவையாகும்‌.


Parimelalagar

மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே-தறுகண்மையும், மானமும், முன் வீரராயினார் சென்ற நன்னெறிக்கண் சேறலும், அரசனால் தேறப்படுதலும் என இந்நான்கு குணமுமே; படைக்கு ஏமம்-படைக்கு அரணாவது.
விளக்கம்:
(இவற்றான் முறையே பகைவரைக் கடிதிற் கொன்று நிற்றலும், அரசனுக்குத் தாழ்வு வாராமற் காத்தலும், "அழியுநர் புறக்கொடை அயில்வாளோச்சா'மை [பு.வெ.மா. வஞ்சி 20] முதலியனவும், அறைபோகாமையும், ஆகிய செய்கைகள் பெறப்பட்டன. இச் செய்கையார்க்குப் பகைவர் நணுகாராகலின், வேறு அரண் வேண்டா என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) மறமும், மானமும், நல்ல வழிச்சேறலும், தெளிவுடைமையு மென இந்நான்குமே படைக்கு அரணாம்,
(என்றவாறு) நல்லவழிச்சேறலாவது மறஞ் செய்யுங் காலத்துக் கலக்கமின்மை.