Kural 765
குறள் 765
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை
kootrrudanru maelvarinum kooti yethirnitrkum
aatrra lathuvae patai
Shuddhananda Bharati
The real army with rallied force
Resists even Death-God fierce.
GU Pope
That is a ‘host' that joins its ranks, and mightily withstands,
Though death with sudden wrath should fall upon its bands.
That indeed is an army which is capable of offering a united resistance, even if Yama advancesagainst it with fury.
Mu. Varadarajan
எமனே சினங்கொண்டு தன்மேல் எதிர்த்து வந்தாலும், ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதே படையாகும்.
Parimelalagar
கூற்று உடன்று மேல் வரினும். கூற்றுவன் தானே வெகுண்டு மேல் வந்தாலும்; கூடி எதிர்நிற்கும் ஆற்றலதுவே படை நெஞ்சு ஒத்து எதிர்நின்று தாங்கும் ஆற்றலையுடையதே படையாவது.
விளக்கம்:
('மருந்தில் கூற்று' ஆகலின், [புற. நா.3] உம்மை சிறப்பும்மை. மிகப்பலர் நெஞ்சொத்தற்குக் காரணம் அரசன்மேல் அன்பு. ஆற்றல் - மனவலி.)
Manakkudavar
(இதன் பொருள்) கூற்றமானது வெகுண்டு தன்மேல்வரினும், சிதறுதலின்றியே எதிர்நிற்கவல்ல வலியுடையதே படையாவது,
(என்றவாறு). இது மாற்றான் மேல் வந்தால் பொறுக்கவேண்டு மென்றது.