குறள் 764

படைமாட்சி

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை

alivinri araipokaa thaaki valivandhtha
vanka nathuvae patai


Shuddhananda Bharati

The glory of army

The army guards its genial flame
Not crushed, routed nor marred in name.


GU Pope

The Excellence of an Army

That is a host, by no defeats, by no desertions shamed,
For old hereditary courage famed.

That indeed is an army which has stood firm of old without suffering destruction or deserting (to theenemy).


Mu. Varadarajan

(போர்முனையில்‌) அழிவு இல்லாததாய்‌, பகைவருடைய வஞ்சனைக்கு இரையாகாததாய்‌, தொன்று தொட்டு வந்த அஞ்சாமை உடையதே படையாகும்‌.


Parimelalagar

அழிவு இன்றி-போரின்கண் கெடுதல் இன்றி; அறை போகாதாகி-பகைவரால் கீழறுக்கப்படாததாய்; வழிவந்த வன்கணதுவே படை-தொன்று தொட்டு வந்த தறுகண்மையை உடையதே அரசனுக்குப் படையாவது.
விளக்கம்:
(அழிவின்மையான் மற மானங்கள் உடைமையும், அறை போகாமையான் அரசன்மாட்டு அன்புடைமையும் பெறப்பட்டன. வழி வந்த வன்கண்மை: கல்நின்றான் எந்தை கணவன் களப்பட்டான், முன்னின்று மொய்யவிந்தார் என்ஐயர்-பின்னின்று, கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி எய்போற் கிடந்தான் என ஏறு," [பு.வெ. மா. வாகை, 22] என்பதனான் அறிக. குற்றியலுகரத்தின் முன்னர் உடம்படுமெய் விகாரத்தான் வந்தது. இது வருகின்ற பாட்டுள்ளும் ஒக்கும்.)


Manakkudavar

(இதன் பொருள்) கெடுதலின்றி, கீழறுக்கப்படாததாகி, குலத்தின் வழிவந்த அஞ் சாமையையுடையதே படையாவது,
(என்றவாறு). வழிவருதல் - வீரன்மகன் வீரனாகுதல். இது படையினது நன்மை கூறிற்று.