குறள் 763

படைமாட்சி

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்

oliththakkaal yennaam uvari yelippakai
naakam uyirppak kedum


Shuddhananda Bharati

The glory of army

Sea-like ratfoes roar ... What if?
They perish at a cobra's whiff.


GU Pope

The Excellence of an Army

Though, like the sea, the angry mice send forth their battle cry;
What then? The dragon breathes upon them, and they die!

What if (a host of) hostile rats roar like the sea ? They will perish at the mere breath of the cobra.


Mu. Varadarajan

எலியாகிய பகை கூடிக்‌ கடல்போல்‌ ஒலித்தாலும்‌ என்ன தீங்கு ஏற்படும்‌? பாம்பு மூச்சு விட்ட அளவில்‌ அவை கெட்டழியும்‌.


Parimelalagar

எலிப்பகை உவரி ஒலித்தக்கால் என்னாம்-எலியாய பகை திரண்டு கடல் போல ஒலித்தால் நாகத்திற்கு என்ன ஏதம் வரும்? நாகம் உயிர்ப்பக் கெடும்-அந்நாகம் உயிர்த்த துணையானே அது தானே கெடும்.
விளக்கம்:
(உவமைச்சொல் தொக்கு நின்றது. இத்தொழில் உவமத்தால் திரட்சி பெற்றாம். வீரரல்லாதார் பலர் திரண்டு ஆர்த்தால் அவற்கு வீரன் அஞ்சான்: அவன் கிளர்ந்த துணையானே அவர்தாம் கெடுவர் என்பது தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம். வீரரல்லாதார் பலரினும் வீரனொருவனை ஆள்தல் நன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் முறையே அரசனுக்குப் படை ஏனையங்கங்களுள் சிறந்தது என்பதூஉம், அதுதன்னுள்ளும் மூலப்படை சிறந்தது என்பதூஉம், அது தன்னுள்ளும் வீரன் சிறந்தான் என்பதூஉம் கூறப்பட்டன.)


Manakkudavar

(இதன் பொருள்) கடல்போல் ஒலித்தாலும் எலியினது மாறுபாட்டினால் வருந் தீமை யென்னுளதாம்; எலி நாகம் உயிர்த்த வளவிலே கெடும்,
(என்றவாறு) இது படைமிகுத்தது வெல்லுமென்று கருதாது வீரரைத் தெளிந்தாளல் வேண்டு மென்றது.