குறள் 761

பொருள்செயல்வகை

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை

uruppamaindhthu ooranjsaa vaelpatai vaendhthan
vaerukkaiyul yellaam thalai


Shuddhananda Bharati

The glory of army

The daring well-armed winning force
Is king's treasure and main resource.


GU Pope

Way of Accumulating Wealth

A conquering host, complete in all its limbs, that fears no wound,
Mid treasures of the king is chiefest found.

The army which is complete in (its) parts and conquers without fear of wounds is the chief wealth ofthe king.


Mu. Varadarajan

எல்லா உறுப்புக்களும்‌ நிறைந்ததாய்‌ இடையூறுகளுக்கு அஞ்சாததாய்‌ உள்ள வெற்றி தரும்‌ படை அரசனுடைய செல்வங்கள்‌ எல்லாவற்றிலும்‌ சிறந்ததாகும்‌.


Parimelalagar

உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல்படை-யானை முதலிய நான்கு உறுப்பானும் நிறைந்து போரின்கண் ஊறுபடுதற்கு அஞ்சாது நின்று பகையை வெல்வதாய படை; வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை-அரசன் செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் தலையாய செல்வம்.
விளக்கம்:
(ஈண்டுப் 'படை' என்றது, அந்நான்கண் தொகுதியை, ஊறு அஞ்சியவழி வேறல் கூடாமையின், 'ஊறு அஞ்சா' என்றும், ஒழிந்த அங்கங்கட்கும் அரசன் தனக்கும் காவலாகலின் 'வெறுக்கையுள் தலை' என்றும் கூறினார்.)


Manakkudavar

படைமாட்சியாவது படையினது நன்மை கூறுதல். படை. மேற்கூறிய பொருளினால் உண்டாமா தலானும், அதனை ஈட்டுதற்கும் நுகர்தற்கும் படை வேண்டுமாதலானும், அதன் பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) யானை - குதிரை - தேர் - கருவி - காலாளாகிய உறுப்புக்களால் அமைந்து, இடுக்கண் உற்றால் அதற்கு அச்சமின்றி, வெற்றியுடைய படை, அரசன் தேடிய பொரு ளெல்லாவற்றிலும் தலையான பொருள்; ஆதலால், படை வேண்டும்.