குறள் 760

பொருள்செயல்வகை

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு

onporul kaalppa iyatrriyaarkku yenporul
yaenai irandum orungku


Shuddhananda Bharati

Way of making wealth

They have joy and virtue at hand
Who acquire treasures abundant.


GU Pope

Way of Accumulating Wealth

Who plenteous store of glorious wealth have gained,
By them the other two are easily obtained.

To those who have honestly acquired an abundance of riches, the other two, (virtue and pleasure)are things easy (of acquisition).


Mu. Varadarajan

சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும்‌ இன்பமுமாகிய இரண்டும்‌ ஒருசேரக்‌ கை கூடும்‌ எளிய பொருளாகும்‌.


Parimelalagar

ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு - நெறியான் வரும் பொருளை இறப்ப மிகப் படைத்தார்க்கு; ஏனை இரண்டும் ஒருங்கு எண்பொருள்- மற்றை அறனும் இன்பமும் ஒருங்கே எளிய பொருள்களாம்.
விளக்கம்:
(காழ்தல்: முதிர்தல். பயன் கொடுத்தல்லது போகாமையின், 'ஒண்பொருள்' என்றும், ஏனை இரண்டும் அதன் விளைவாகலின் தாமே ஒருகாலத்திலே உளவாம் என்பார் 'எண்பொருள்' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் அதனான் வரும் பயன் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒள்ளிய பொருளை முற்ற உண்டாக்கினார்க்கு ஒழிந்த அறமும் காமமுமாகிய பொருளிரண்டும் ஒருங்கே எளிய பொருளாக வெய்தலாம், (எ-று).