குறள் 759

பொருள்செயல்வகை

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்

seika porulaich serunar serukkarukkum
yekhkathanitr kooriya thil


Shuddhananda Bharati

Way of making wealth

Make wealth; there is no sharper steel
The insolence of foes to quell.


GU Pope

Way of Accumulating Wealth

Make money! Foeman's insolence o'ergrown
To lop away no keener steel is known.

Accumulate wealth; it will destroy the arrogance of (your) foes; there is no weapon sharper than it.


Mu. Varadarajan

ஒருவன்‌ பொருளை ஈட்டவேண்டும்‌; அவனுடைய பகைவரின்‌ செருக்கைக்‌ கெடுக்கவல்ல வாள்‌ அதைவிடக்‌ கூர்மையானது வேறு இல்லை.


Parimelalagar

பொருளைச் செய்க - தமக்கொன்றுண்டாகக் கருதுவார் பொருளை உண்டாக்குக; செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு - தம் பகைவர் தருக்கினை அறுக்கும் படைக்கலம் அதுவாம்; அதனிற் கூறியது இல் - அதற்கு அதுபோலக் கூரிய படைக்கலம் பிறிது இல்லை.
விளக்கம்:
('அதுவாம்' 'அதற்கு' என்பன அவாய் நிலையான் வந்தன. பொருளைச் செய்யவே பெரும்படையும் நட்பும் உடையராவர். ஆகவே, பகைவர் தருக்கு ஒழிந்து தாமே அடங்குவர் என்பார், 'செறுநர் செருக்கு அறுக்கு எஃகு' என்றும், ஏனை எஃகுகள் அதுபோல அருவப்பொருளை அறுக்க மாட்டாமையின் 'அதனிற் கூறியது இல்' என்றும் கூறினார்.)


Manakkudavar

(இதன் பொருள்) பொருளையுண்டாக்குக ; பகைவரது பெருமிதத்தை யறுக்கலாங் கருவி, அப்பொருள் போலக் கூரியது பிறிது இல்லை,
(என்றவாறு). இது பொருளீட்டல் வேண்டுமென்றது.