குறள் 757

பொருள்செயல்வகை

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு

arulaennum anpeen kulavi porulaennum
selvach seviliyaal undu


Shuddhananda Bharati

Way of making wealth

Grace the child of love is nourished
By the wet-nurse of wealth cherished.


GU Pope

Way of Accumulating Wealth

'Tis love that kindliness as offspring bears:
And wealth as bounteous nurse the infant rears.

The child mercy which is borne by love grows under the care of the rich nurse of wealth.


Mu. Varadarajan

அன்பினால்‌ பெறப்பட்ட அருள்‌ என்று கூறப்படும்‌ குழந்தை, பொருள்‌ என்று கூறப்படும்‌ செல்வமுள்ள செவிலித்‌ தாயால்‌ வளர்வதாகும்‌.


Parimelalagar

அன்பு ஈன் அருள் என்னும் குழவி-அன்பினால் ஈனப்பட்ட அருள் என்னும் குழவி; பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு - பொருள் என்று உயர்த்துச் சொல்லப்படும் செல்வத்தையுடைய செவிலியான் வளரும்.
விளக்கம்:
(தொடர்பு பற்றாதே வருத்தமுற்றார்மேல் செல்வதாய அருள் தொடர்பு பற்றிச் செல்லும் அன்பு முதிர்ந்துழி உளதாவதாகலின், அதனை 'அன்பு ஈன் குழவி' என்றும், அது வறியார் மேற்செல்வது அவ்வறுமை களையவல்லார்க்காதலின் பொருளை அதற்குச் 'செலிலி' என்றும், அஃது உலகிற் செவிலியர் போலாது, தானே எல்லாப் பொருளும் உதவி வளர்த்தலிற் 'செல்வச் 'செவிலி' என்றும் கூறினார்.)


Manakkudavar

(இதன் பொருள்) அறம் செய்தற்குக் காரணமாகிய அன்பினின்றும் தோன்றிய அருளாகிய குழவி, பொருளென்று சொல்லப்படும் செல்வத்தையுடைய செவிலித் தாய் வளர்த்தலாலே உண்டாம்,
(என்றவாறு). இது பொருளுடையார்க்கே அறஞ்செய்தலாவதென்பது கூறிற்று.