குறள் 756

பொருள்செயல்வகை

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்

uruporulum ulku porulumthan onnaarth
thaeruporulum vaendhthan porul


Shuddhananda Bharati

Way of making wealth

Escheats, derelicts; spoils of war
Taxes duties are king's treasure.


GU Pope

Way of Accumulating Wealth

Wealth that falls to him as heir, wealth from the kingdom's dues,
The spoils of slaughtered foes; these are the royal revenues.

Unclaimed wealth, wealth acquired by taxes, and wealth (got) by conquest of foes are (all) thewealth of the king.


Mu. Varadarajan

இறையாக வந்து சேரும்‌ பொருளும்‌, சுங்கமாகக்‌ கொள்ளும்‌ பொருளும்‌, தன்‌ பகைவரை வென்று திறமையாகக்‌ கொள்ளும்‌ பொருளும்‌ அரசனுடைய பொருள்களாகும்‌.


Parimelalagar

உறு பொளும் - உடையாரின்மையின் தானே வந்துற்ற பொருளும்; உல்கு பொருளும் - சுங்கமாகிய பொருளும்; தன் ஒன்னார்த் தெறுபொருளும் - தன் பகைவரைத் திறையாகக் கொள்ளும் பொருளும்; வேந்தன் பொருள் - அரசனுக்கு உரிய பொருள்கள்.
விளக்கம்:
(உறுபொருள்; வைத்தார் இறந்துபோக நெடுங்காலம் நிலத்தின்கண் கிடந்து பின் கண்டெடுத்தூஉம், தாயத்தார் பெறாததூஉமாம். சுங்கம்-கலத்தினும் காலினும் வரும் வண்டங்கட்கு இறையாயது. தெறுபொருள்: 'தெறுதலான் வரும் பொருள்' என விரியும். ஆறில் ஒன்று ஒழியவும் உரியன கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் அஃது ஈட்டும் நெறி கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) தானே வந்துற்ற பொருளும், ஆயத்தால் வரும் பொருளும், தன் பகைவரை யடர்த்துக்கொண்ட பொருளும், அரசனுக்குப் பொருளாம்,
(என்றவாறு). உறு பொருள் - காவற் பொருள்.