Kural 755
குறள் 755
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்
arulodum anpodum vaaraap porulaakkam
pullaar purala vidal
Shuddhananda Bharati
Riches devoid of love and grace
Off with it; it is disgrace!
GU Pope
Wealth gained by loss of love and grace,
Let man cast off from his embrace.
(Kings) should rather avoid than seek the accumulation of wealth which does not flow in with mercyand love.
Mu. Varadarajan
அருளோடும் அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.
Parimelalagar
புல்லார் புரள விடல். அருளொடும் அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம் - தாம் குடிகள்மாட்டுச் செய்யும் அருளொடும், அவர் தம்மாட்டுச் செய்யும் அன்பொடும் கூடி வாராத பொருளீட்டத்தை, புல்லார் புரள விடல் - அரசர் பொருந்தாது கழியவிடுக.
விளக்கம்:
(அவற்றொடு கூடி வருதலாவது, ஆறிலொன்றாய் வருதல். அவ்வாறு வாராத பொருளீட்டம் பசுமட்கலத்துள் நீர் போலச் செய்தானையும் கொண்டு இறத்தலின், அதனைப் 'புல்லார்' என்று ஒழியாது, 'புரளவிடல்' என்றும் கூறினார்.)
Manakkudavar
(இதன் பொருள்) அருளுடைமையோடும் அன்புடைமையோடும் வாராத பொருள் ளால் வரும் ஆக்கத்தை பொருந்தாது போக விடுக,
(என்றவாறு). இது பொருள் தேடுங்கால் பிறர் வருத்தத்திற்கு உபகரியாதும், பயின்றார் மாட்டுக் காதலில்லாமலும், பொருள் தேடுதலைத் தவிர்கவென்றது