குறள் 753

பொருள்செயல்வகை

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று

porulaennum poiyaa vilakkam irularukkum
yenniya thaeyaththuch senru


Shuddhananda Bharati

Way of making wealth

Waneless wealth is light that goes
To every land and gloom removes.


GU Pope

Way of Accumulating Wealth

Wealth, the lamp unfailing, speeds to every land,
Dispersing darkness at its lord's command.

The imperishable light of wealth goes into regions desired (by its owner) and destroys the darkness(of enmity therein).


Mu. Varadarajan

பொருள்‌ என்று சொல்லப்படுகின்ற நந்தாவிளக்கு, நினைத்த இடத்திற்குச்‌ சென்று உள்ள இடையூற்றைக்‌ கெடுக்கும்‌.


Parimelalagar

பொருள் என்னும் பொய்யா
விளக்கம்:
- பொருள் என்று எல்லாரானும் சிறப்பிக்கப்படும் நந்தா விளக்கு; எண்ணிய தேயத்துச் சென்று இருள் அறுக்கும் - தன்னைச் செய்தவர்க்கு அவர் நினைத்த தேயத்துச் சென்று பகை என்னும் இருளைக் கெடுக்கும்.
விளக்கம்:
(எல்லார்க்கும் எஞ்ஞான்றும் இன்றியமையாததாய் வருதல் பற்றி, 'பொய்யா
விளக்கம்:
' என்றும், ஏனைய விளக்கோடு இதனிடை வேற்றுமை தோன்று எண்ணிய தேயத்துச் சென்று என்றும் கூறினார். ஏகதேச உருவகம். இவை மூன்று பாட்டானும் பொருளது சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பொருளென்னும் மெய்யாகிய ஒளி, எண்ணப்பட்ட தேசமெல் லாவற்றினுஞ் சென்று பகையென்னும் இருளை அறுக்கும், (எ - று. இது பொருள் ஒளியில்லாதார்க்கும் ஒளியுண்டாக்கும்; அரசன் பொரு ளுடையனானால், தான் கருதிய தேசமெல்லாம் தன்னாணை நடத்துவானென்றது.