குறள் 752

பொருள்செயல்வகை

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு

illaarai yellaarum yelluvar selvarai
selvarai yellaarum seivachiirappu


Shuddhananda Bharati

Way of making wealth

The have-nothing poor all despise
The men of wealth all raise and praise.


GU Pope

Way of Accumulating Wealth

Those who have nought all will despise;
All raise the wealthy to the skies.

All despise the poor; (but) all praise the rich.


Mu. Varadarajan

பொருள்‌ இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்‌) எல்லாரும்‌ இகழ்வர்‌; செல்வரை (வறு நன்மை இல்லாவிட்டாலும்‌) எல்லாரும்‌ சிறப்புச்‌ செய்வர்‌.


Parimelalagar

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் - எல்லா நன்மையும் உடையராயினும் பொருளில்லாரை யாவரும் இகழ்வர்; செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வர் - எல்லாத் தீமையும் உடையராயினும் அஃது உடையாரை யாவரும் உயரச் செய்வர்.
விளக்கம்:
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் - எல்லா நன்மையும் உடையராயினும் பொருளில்லாரை யாவரும் இகழ்வர்; செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வர் - எல்லாத் தீமையும் உடையராயினும் அஃது உடையாரை யாவரும் உயரச் செய்வர். (உயரச் செய்தல் - தாம் தாழ்ந்து நிற்றல். இகழ்தற்கண்ணும் தாழ்தற்கண்ணும் பகைவர், நட்டார், நொதுமலர் என்னும் மூவகையாரும் ஒத்தலின், 'யாவரும்' என்றார். பின்னும் கூறியது அதனை வலியுறுத்தற்பொருட்டு)


Manakkudavar

(இதன் பொருள்) பொருளில்லாதாரை எல்லாரும் இகழுவர், பொருளுடையாரை எல்லாருஞ் சிறப்புச் செய்வர்.
(என்றவாறு). இது சிறப்பெய்தலும் பொருளுடைமையாலே வருமென்றது.