குறள் 751

பொருள்செயல்வகை

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்

porulal lavaraip porulaakach seiyum
porulallathu illai porul


Shuddhananda Bharati

Way of making wealth

Naught exists that can, save wealth
Make the worthless as men of worth.


GU Pope

Way of Accumulating Wealth

Nothing exists save wealth, that can
Change man of nought to worthy man.

Besides wealth there is nothing that can change people of no importance into those of (some)importance.


Mu. Varadarajan

ஒரு பொருளாக மதிக்கத்‌ தகாதவரையும்‌ மதிப்புடையவராகச்‌ செய்வதாகிய பொருள்‌ அல்லாமல்‌, சிறப்புடைய பொருள்‌ வேறு இல்லை.


Parimelalagar

பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது - ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் படுவாராகச் செய்ய வல்ல பொருளையொழிய; பொருள் இல்லை - ஒருவனுக்குப் பொருளாவதில்லை.
விளக்கம்:
(மதிக்கப்படாதார் - அறிவிலாதார், இழி குலத்தார். இழிவு சிறப்புஉம்மை விகாரத்தால் தொக்கது. மதிக்கப்படுவாராகச் செய்தல் அறிவுடையாரும் உயர்குலத்தாரும் அவர்பாற் சென்று நிற்கப் பண்ணுதல். அதனால் ஈட்டப்படுவது அதுவே; பிறிதில்லை என்பதாம்.)


Manakkudavar

பொருள் செயல் வகையாவது பொருள் தேடுமாறும் அதனாற்பயன்கொள்ளு மாறும் கூறுதல். இது மேற்கூறிய நாடும் நகரமுமுடையார்க்கு உளதாவதொன் ராதலின், அதன்பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் பொருளாக மதிக்கப் பண்ணுவதாகிய பொருளையல்லது வேறு பொருள் என்று சொல்லப்படுவதில்லை. இது வடிவில்லாதாரைப் பெண்டிரிகழ்வார்; பொருளுடையாரை யாவரும் நன்றாக மதிப்பரென்றது.