குறள் 749

அரண்

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்

munaimukaththu maatrralar saaya vinaimukaththu
veeraeithi maanda tharan


Shuddhananda Bharati

Fortress

A fort it is that fells the foes
And gains by deeds a name glorious.


GU Pope

The Fortification

At outset of the strife a fort should foes dismay;
And greatness gain by deeds in every glorious day.

A fort is that which derives excellence from the stratagems made (by its inmates) to defeat their enemies in the battlefield.


Mu. Varadarajan

போர்முனையில்‌ பகைவர்‌ அழியும்படியாக (உள்ளிருந்தவர்‌ செய்யும்‌) போர்ச்‌ செயல்‌ வகையால்‌ பெருமை பெற்றுச்‌ சிறப்புடையதாய்‌ விளங்குவது அரண்‌ ஆகும்‌.


Parimelalagar

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறு எய்தி - போர் தொடங்கின அளவிலே பகைவர் கெடும் வண்ணம் அகத்தோர் செய்யும் வினை வேறுபாடுகளான் வீறு பெற்று; மாண்டது அரண் - மற்றும் வேண்டும் மாட்சியையுடையதே அரணாவது.
விளக்கம்:
(தொடக்கத்திற் கெட்டார் பின்னுங் கூடிப் பொருதல் கூடாமையின், 'முனைமுகத்துச் சாய' என்றார். வினை வேறுபாடுகளாவன: பகைவர் தொடங்கிய போரினை அறிந்து, எய்தல், எறிதல், குத்துதல், வெட்டுதல் என்றிவை முதலாய வினைகளுள், அதனைச் சாய்ப்பன செய்தல். 'மற்றும் வேண்டும் மாட்சி' யென்றது, புறத்தோர் அறியாமற் புகுதல் செய்தற்குக் கண்ட சுருங்கை வழி முதலாயின உடைமை.)


Manakkudavar

(இதன் பொருள்) முந்துற்ற முகத்தினையுடைய பகைவர் கெடும்படியாக, வினை செய்யும் இடத்து வெற்றியெய்தி மாட்சிமைப்பட்டது அரணாவது,
(என்றவாறு). அஃதாவது அட்டாலகமும் மதிற்பொறியும் முதலாயின் மதிற்றலையில் அமைத்தல்.