குறள் 748

அரண்

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்

mutrraatrri mutrri yavaraiyum patrraatrrip
patrriyaar vaelvathu aran


Shuddhananda Bharati

Fortress

A fort holds itself and defies
The attacks of encircling foes.


GU Pope

The Fortification

Howe'er the circling foe may strive access to win,
A fort should give the victory to those who guard within.

That is a fort whose inmates are able to overcome without losing their ground, even abler men whohave besieged it.


Mu. Varadarajan

முற்றுகையிடுவதில்‌ வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும்‌ (உள்ளிருந்தவர்‌ பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண்‌ ஆகும்‌.


Parimelalagar

முற்று அற்றி முற்றியவரையும் - தானைப் பெருமையால் சூழ்தல் வல்லராய் வந்து சூழ்ந்த புறத்தோரையும், பற்றி யார் பற்று ஆற்றி வெல்வது அரண் - தன்னைப் பற்றிய அகத்தோர் தாம் பற்றிய இடம் விடாதே நின்று பொருது வெல்வதே அரணாவது.
விளக்கம்:
(உம்மை, சிறப்பும்மை. 'பற்றின் கண்ணே ஆற்றி' என விரியும். பற்று - ஆகுபெயர். 'வெல்வது' என, உடையார் தொழில் அரண்மேல் நின்றது. பெரும் படையானைச் சிறுபடையான் பொறுத்து நிற்கும் துணையேயன்றி, வெல்லும் இயல்பினது என்பதாம். இதற்குப் பிறிது உரைப்பாரும் உளர். இவை ஏழு பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) சூழவல்லாரைச் சூழ்ந்து, நலிந்தவரையும் தன்னகத்து நின்று காக்க வல்லவராய்க் காப்பவர் வெல்வது அரணாவது, (எ - று ) பற்றாற்றுதல் - தாம் பற்றின இடம் விடாது வெல்லுதல்.