Kural 746
குறள் 746
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்
yellaap porulum utaiththaai idaththuthavum
nallaal utaiyathu aran
Shuddhananda Bharati
A fort is full of stores and arms
And brave heroes to meet alarms.
GU Pope
A fort, with all munitions amply stored,
In time of need should good reserves afford.
A fort is that which has all (needful) things, and excellent heroes that can help it against destruction(by foes).
Mu. Varadarajan
தன்னிடம் உள்ளவர்க்கு (வண்டிய எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல வீரர்களை உடையது அரண் ஆகும்.
Parimelalagar
எல்லாப் பொருளும் உடைத்தாய - அகத்தோர்க்கு வேண்டும் பொருள்கள எல்லாவற்றையும் உள்ளே உடைத்தாய்; இடத்து உதவும் நல்லாள் உடையது அரண் - புறத்தோரால் அழிவெய்தும் எல்லைக்கண் அஃது எய்தாவகை உதவிக் காக்கும் நல்ல வீரரையும் உடையதே அரணாவது.
விளக்கம்:
(அரசன் மாட்டு அன்பும் மானமும் மறமும் சோர்வின்மையும் முதலிய நற்குணங்கள் உடைமைபற்றி, 'நல்லாள்' என்றார்.)
Manakkudavar
(இதன் பொருள்) எல்லாப் பொருள்களையும் உடைத்தாய் , உற்றவிடத்து உதவவல்ல வீரரையுடையது அரண்,
(என்றவாறு) எல்லாப் பொருளுமாவன் - நுகரவேண்டுவனவும் படைக்கலங்களும்.