Kural 745
குறள் 745
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்
kolatrkarithaaik kondakoolth thaaki akaththaar
nilaikkelithaam neerathu aran
Shuddhananda Bharati
Impregnable with stores of food
Cosy to live-That fort is good.
GU Pope
Impregnable, containing ample stores of food,
A fort for those within, must be a warlike station good.
A fort is that which cannot be captured, which abounds in suitable provisions, and affords a position of easy defence to its inmates.
Mu. Varadarajan
பகைவரால் கைப்பற்றப்படுவதற்கு முடியாததாய், தன்னிடம் உணவுப்பொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதற்கு எளியதாகிய தன்மை உடையது அரண்.
Parimelalagar
கொளற்கு அரிதாய் - புறத்தாரால் கோடற்கு அரிதாய்; கொண்ட கூழ்த்து ஆகி - உட்கொண்ட பலவகை உணவிற்றாய்; அகத்தார் நிலைக்கு எளிதாம் நீரது அரண் - அகத்தாரது போர்நிலைக்கு எளிதாய நீர்மையையுடையதே அரணாவது.
விளக்கம்:
(கோடற்கு அருமை: இளை கிடங்குகளானும், பொறிகளானும் இடங்கொள்ளுதற்கு அருமை. உணவு தலைமைபற்றிக் கூறினமையின், மற்றுள்ள நுகரப்படுவனவும் அடங்கின. நிலைக்கு எளிதாம் நீர்மையாவது, அகத்தார் விட்ட ஆயுதம் முதலிய புறத்தார்மேல் எளிதில் சேறலும்' அவர் விட்டன அகத்தார்மேல் செல்லாமையும்; பதணப்பரப்பும் முதலாயின.
Manakkudavar
(இதன் பொருள்) பகைவரால் கொள்ளுதற்கு அரிதாய், தன்னகத்தே அமைக்கப் பட்ட உணவையும் உடைத்தாய், அகத்துறைவார்க்கு நிற்றற்கு எளிதாகும் நீரை யுடைத்தாயிருப்பது அரணாவது,
(என்றவாறு). எனவே, புறத்தார்க்கு நிற்றற்கரிதாகும் நீரையுடைத்தாதலும் வேண்டும் மென்றவாறாயிற்று; தூரத்தில் நீரைப் பிறரறியாமல் உள்ளே புகு தவிடுதலும் வேண்டும் என்பதாம்.