குறள் 744

அரண்

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்

sirukaappitr paeridaththa thaaki urupakai
ookkam alippa tharan


Shuddhananda Bharati

Fortress

Ample in space, easy to hold
The fort foils enemies bold.


GU Pope

The Fortification

A fort must need but slight defence, yet ample be,
Defying all the foeman's energy.

A fort is that which has an extensive space within, but only small places to be guarded, and such ascan destroy the courage of besieging foes.


Mu. Varadarajan

காக்கவேண்டிய இடம்‌ சிறியதாய்‌, மற்ற இடம்‌ பெரிய பரப்புள்ளதாய்‌, தன்னை எதிர்த்து வந்த பகைவருடைய ஊக்கத்தை அழிக்கவல்லது அரண்‌ ஆகும்‌


Parimelalagar

சிறு காப்பின் பேர் இடத்து ஆகி - காக்க வேண்டும் இடம் சிறிதாய் அகன்ற இடத்தை உடைத்தாய்; உறு பகை ஊக்கம் அழிப்பது அரண் - தன்னை வந்து முற்றிய பகைவரது மன எழுச்சியைக் கெடுப்பதே அரணாவது.
விளக்கம்:
(வாயிலும் வழியும் ஒழிந்த இடங்கள் மலை, காடு, நீர்நிலை என்றிவற்றுள் ஏற்பன உடைத்தாதல் பற்றி, 'சிறுகாப்பின்' என்றும், அகத்தோர் நலிவின்றியிருத்தல் பற்றி, 'பேரிடத்தது ஆகி' என்றும், தன் வலி நோக்கி 'இது பொழுதே அழித்தும்' என்று வரும் பகைவர் வந்து கண்டால், அவ்வூக்கமொழிதல் பற்றி, 'ஊக்கம் அழிப்பது' என்றும் கூறினார்.)


Manakkudavar

(இதன் பொருள்) காக்கவேண்டும் இடம் சிறிதாய், மதிலகலம் பெரிய இடத்தை யுடைத்தாய், மதிலையுற்ற பகைவரது மிகுதியைக் கெடுப்பது அரணாவது, (எ-று). சிறுகாவலாவது ஒருபக்கம் மலையாயினும் நீராயினும் உடைத்தாதல்.