குறள் 740

நாடு

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு

aangkamai vaeithiyak kannum payaminrae
vaendhthamai villaatha naadu


Shuddhananda Bharati

The country

Though a land has thus every thing
It is worthless without a king.


GU Pope

The Land

Though blest with all these varied gifts' increase,
A land gains nought that is not with its king at peace.

Although in possession of all the above mentioned excellences, these are indeed of no use to acountry, in the absence of harmony between the sovereign and the swjects.


Mu. Varadarajan

நல்ல அரசன்‌ பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள்‌ எல்லாம்‌ அமைந்திருந்த போதிலும்‌ அவற்றால்‌ பயன்‌ இல்லாமற்‌ போகும்‌.


Parimelalagar

வேந்து அமைவு இல்லாத நாடு - வேந்தனோடு மேவுதல் இல்லாத நாடு; ஆங்கு அமைவு எய்தியக் கண்ணும் பயம் இன்றே - மேற்சொல்லிய குணங்கள் எல்லாவற்றினும் நிறைந்திருந்ததாயினும், அவற்றால் பயனுடைத்தன்று.
விளக்கம்:
('வேந்து அமைவு' எனவே, குடிகள் அவன்மாட்டு அன்புடையராதலும், அவன்தான் இவர்மாட்டு அருளுடையனாதலும் அடங்கின. அவை இல்வழி வாழ்வோர் இன்மையின், அவற்றால் பயனின்றாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அதன் குற்றம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) மேற்கூறியவாற்றால் எல்லாம் அமைந்ததாயினும், பயனில்லை யாம்; வேந்தனது அமைதியை உடைத்தல்லாத நாடு,
(என்றவாறு). இது நாட்டுக்கு அரசனும் பண்புடையனாகல் வேண்டுமென்றது.