குறள் 739

நாடு

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு

naataenpa naataa valaththana naadalla
naada valandhtharu naadu


Shuddhananda Bharati

The country

A land is land which yields unsought
Needing hard work the land is nought.


GU Pope

The Land

That is a land that yields increase unsought,
That is no land whose gifts with toil are bought.

The learned say that those are kingdom whose wealth is not laboured for, and those not, whosewealth is only obtained through labour.


Mu. Varadarajan

முயற்சி செய்து தேடாமலே தரும்‌ வளத்தை உடைய நாடுகளைச்‌ சிறந்த நாடுகள்‌ என்று கூறுவர்‌; தேடி முயன்றால்‌ வளம்‌ தரும்‌ நாடுகள்‌ அல்ல,


Parimelalagar

நாடா வளத்தன நாடு என்ப - தங்கண் வாழ்வார் தேடி வருந்தாமல் அவர்பால் தானே அடையும் செல்வத்தை உடையவற்றை நூலோர் நாடு என்று சொல்வர்; நாடவளம் தரும் நாடு நாடு அல்ல - ஆதலால் தேடி வருந்தச் செல்வம் அடைவிக்கும் நாடுகள் நாடாகா.
விளக்கம்:
(நாடுதல், இரு வழியும் வருத்தத்தின்மேல் நின்றது. "பொருள் செய்வார்க்கும் அஃது இடம்" (சிந். நாம 48.) என்றார் பிறரும். நூலோர் விதிபற்றி எதிர்மறை முகத்தான் குற்றம் கூறியவாறு. இவ்வாறின்றி, 'என்ப' என்பதனைப் பின்னும் கூட்டி இருபொருள்பட உரைப்பின், அனுவாதமாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) தேட வேண்டாத வளத்தினை யுடைய நாட்டை நாடென்று சொல்லுவர்; தேடினால் வளந்தருகின்ற நாட்டை நாடல்ல வென்று சொல்லுவர்.