குறள் 737

நாடு

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு

irupunalum vaaindhtha malaiyum varupunalum
vallaranum naattitrku uruppu


Shuddhananda Bharati

The country

Waters up and down, hills and streams
With strong forts as limbs country beams.


GU Pope

The Land

Waters from rains and springs, a mountain near, and waters thence;
These make a land, with fortress' sure defence.

The constituents of a kingdom are the two waters (from above and below), well situated hills and anundestructible fort.


Mu. Varadarajan

ஊற்றும்‌ மழையுமாகிய இருவகை நீர்வளமும்‌, தக்கவாறு அமைந்த மலையும்‌, அந்த மலையிலிருந்து ஆறாக வரும்‌ நீர்‌ வளமும்‌, வலிய அரணும்‌ நாட்டிற்கு உறுப்புக்களாம்‌.


Parimelalagar

இருபுனலும் -'கீழ் நீர், மேல் நீர்' எனப்பட்ட தன்கண் நீரும்; வாய்ந்தமலையும் - வாய்ப்புடையதாய மலையும்; வருபுனலும் - அதனினின்றும் வருவதாய நீரும்; வல்லரணும் - அழியாத நகரியும்; நாட்டிற்கு உறுப்பு - நாட்டிற்கு அவயவமாம்.
விளக்கம்:
(ஈண்டுப் 'புனல்' என்றது துரவு கேணிகளும் ஏரிகளும் ஆறுகளுமாகிய ஆதாரங்களை, அவயவமாதற்குரியன அவையே ஆகலின். அவற்றான் வானம் வறப்பினும் வளனுடைமை பெறப்பட்டது. இடையதன்றி ஒருபுடையதாகலும், தன் வளம் தருதலும், மாரிக்கண் உண்ட நீர் கோடைக்கண் உமிழ்தலும் உடைமைபற்றி 'வாய்ந்த மலை' என்றார். அரண்-ஆகுபெயர். இதனான் அதன் அவயவம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) மேல் நீர் கீழ் நீர் நிறுத்தலாமிடத்தினைக் கிணறுகல்லி நீருண்டா க்குமிடத்தினையும், பயன்படும் மலையினையும், ஆறொழுகுமிடத்தினையும், வலிய அரணாகும் இடத்தினையும் கண்டு, அவ்விடத்தை நாடாக்குக; அவை நாட்டிற்கு உறுப்பாதலால்,
(என்றவாறு) இஃது இவை ஐந்துங் குறையாமல் வேண்டுமென்றது.