Kural 735
குறள் 735
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு
palkuluvum paalseiyum utpakaiyum vaendhthalaikkum
kolkurumpum illathu naadu
Shuddhananda Bharati
Sects and ruinous foes are nil
No traitors in a land tranquil.
GU Pope
From factions free, and desolating civil strife, and band
Of lurking murderers that king afflict, that is the land’.
A kingdom is that which is without various (irregular) associations, destructive internal enemies,and murderous savages who (sometimes) harass the sovereign.
Mu. Varadarajan
பலவகையாக மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.
Parimelalagar
பல் குழுவும் - சங்கேத வயத்தான் மாறுபட்டுக் கூடும் பல கூட்டமும்; பாழ் செய்யும் உட்பகையும் - உடனுறையா நின்றே பாழாகச் செய்யும் உட்பகையும்; வேந்து அலைக்கும் கொல் குறும்பும் இல்லது நாடு - அளவு வந்தால் வேந்தனை அலைக்கும் கொல்வினைக் குறும்பரும் இல்லாததே நாடாவது.
விளக்கம்:
(சங்கேதம் - சாதி பற்றியும் கடவுள் பற்றியும் பலர்க்கு உளதாம் ஒருமை. உட்பகை - ஆறலைப்பார், கள்வர், குறளை கூறுவார் முதலிய மக்களும், பன்றி, புலி கரடி முதலிய விலங்குகளும். 'உட்பகை, குறும்பு' என்பன ஆகுபெயர். இம் மூன்றும் அரசனாலும் வாழ்வாராலும் கடியப்பட்டு நடப்பதே நாடு என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) பலபல்வாய்த் திரளுந் திரட்சியும், பாழ்செய்யும் உட்பகையும், வேந்தனை யலைக்கின்ற கொலைத் தொழிலினையுடைய குறும்பரும், இல்லாதது நாடு,
(என்றவாறு).