குறள் 730

அவையஞ்சாமை

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்

ularaeninum illaarodu oppar kalanachik
katrra selachsollaa thaar


Shuddhananda Bharati

Courage before councils

They are breathing dead who dare not
Empress before the wise their art.


GU Pope

Not to dread the Council

Who what they've learned, in penetrating words know not to say,
The council fearing, though they live, as dead are they.

Those who through fear of the assembly are unable to set forth their learning in an interestingmanner, though alive, are yet like the dead.


Mu. Varadarajan

அவைக்களத்திற்கு அஞ்சித்‌ தாம்‌ கற்றவைகளை (கேட்பவர்‌ மனத்தில்‌) பதியுமாறு சொல்லமுடியாதவர்‌, உயிரோடு வாழ்ந்தாலும்‌ இறந்தவர்க்கு ஒப்பாவர்‌.


Parimelalagar

களன் அஞ்சிக் கற்ற செலச் சொல்லாதார் - அவைக் களத்தை அஞ்சித் தாம் கற்றவற்றை அதற்கு ஏற்கச் சொல்ல மாட்டாதார்; உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் - உயிர் வாழ்கின்றாராயினும் உலகத்தாரால் எண்ணப்படாமையின் இறந்தாரோடு ஒப்பர்.
விளக்கம்:
('ஈண்டுக் 'களன்' என்றது ஆண்டிருந்தாரை. இவை ஐந்து பாட்டானும் அவை அஞ்சு வாரது இழிவு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) உளராயினும் செத்தாரோடு ஒப்பார்; அவைக்களத்தை யஞ்சித் தாம் கற்றதனை அதற்கு இசையச் சொல்லமாட்டாதார்,
(என்றவாறு). இது செத்தாரோடு ஒப்ப ரென்றது. இவை ஐந்தும் அவையஞ்சுதலான் வருங்குற்றம் கூறின.