குறள் 731

நாடு

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு

thallaa vilaiyulum thakkaarum thaalvilaach
selvarum saervathu naadu


Shuddhananda Bharati

The country

It's country which has souls of worth
Unfailing yields and ample wealth.


GU Pope

The Land

Where spreads fertility unfailing, where resides a band,
Of virtuous men, and those of ample wealth, call that a land’

A kingdom is that in which (those who carry on) a complete cultivation, virtuous persons, andmerchants with inexhaustible wealth, dwell together.


Mu. Varadarajan

குறையாத விளைபொருளும்‌, தக்க அறிஞரும்‌, கேடில்லாத செல்வம்‌ உடையவரும்‌ கூடிப்‌ பொருந்தியுள்ள நாடே நாடாகும்‌.


Parimelalagar

தள்ளா விளையுளும் - குன்றாத விளையுளைச் செய்வோரும்; தக்காரும் - அறவோரும்; தாழ்வு இலாச் செல்வரும் - கேடு இல்லாச் செல்வமுடையோரும்; சேர்வது நாடு - ஒருங்கு வாழ்வதே நாடாவது:
விளக்கம்:
(மற்றை உயர்திணைப் பொருள்களோடும் சேர்தல்தொழிலோடும் இயையாமையின், 'விளையுள்' என்பது உழவர்மேல் நின்றது. குன்றாமை: எல்லா உணவுகளும் நிறைய உளவாதல். இதனான் வாழ்வார்க்கு வறுமையின்மை பெறப்பட்டது. அறவோர் - துறந்தோர், அந்தணர் முதலாயினார். "நற்றவஞ் செய்வார்க்கு இடம்; தவம் செய்வார்க்கும் அஃது இடம்" (சீவக. நாமக. 48) என்றார் பிறரும். இதனான் அழிவின்மை பெறப்பட்டது. கேடு இல்லாமை - வழங்கத் தொலையாமை. செல்வர் - கலத்தினும் காலினும் அரும்பொருள் தரும் வணிகர். இதனான் அரசனுக்கும் வாழ்வார்க்கும் பொருள் வாய்த்தல் பெறப்பட்டது.) --


Manakkudavar

பொருளின் பகுதி: அது கூறிய அதிகாரம் ஐந்தினும் முற்படப் பொரு ளாக்குவதற்கு இடமாகிய நாட்டியல்பு ஓரதிகாரத்தானும், அந்நாட்டிற்கு ஏமமாகிய அரணியல்பு ஓரதிகாரத்தானும், அவ்விடத்தி லாக்கும் பொருள் ஓரதிகாரத் தானும், அப்பொருளினா லாக்கும் படையின் நன்மை ஓரதிகாரத்தானும், அப்படையின் நன்மையா லாக்கும் படைச்செருக்கு ஓரதிகாரத்தானும் கூறப் படும். இஃது அமைச்சராற் செய்யப்படுதலின், அதன்பின் கூறப்பட்டது. அவற்றுள், நாடாவது நாட்டிலக்கணங் கூறுதல்.(இதன் பொருள்) தப்பாமல் விளையும் நிலங்களும், தகுதி யுடையாரும், தாழ்வில் லாத செல்வரும் சேர்வது நாடு,
(என்றவாறு). தள்ளா விளையுள் - மழையில்லாத காலத்தினும் சாவிபோகாத நிலம்.