குறள் 728

அவையஞ்சாமை

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்

pallavai katrrum payamilarae nallavaiyul
nanku selachsollaa thaar


Shuddhananda Bharati

Courage before councils

Though learned much his lore is dead
Who says no good before the good.


GU Pope

Not to dread the Council

Though many things they've learned, yet useless are they all,
To man who cannot well and strongly speak in council hall.

Those who cannot agreeably speak good things before a good assembly are indeed unprofitablepersons inspite of all their various acquirements.


Mu. Varadarajan

நல்ல அறிஞரின்‌ அவையில்‌ நல்ல பொருளைக்‌ கேட்பவர்‌ மனத்தில்‌ பதியுமாறு சொல்லமுடியாதவர்‌, பல நூல்களைக்‌ கற்றாலும்‌ பயன்‌ இல்லாதவரே.


Parimelalagar

நல்லவையுள் நன்கு செலச் சொல்லாதார் - நல்லார் இருந்த அவைக்கண் நல்ல சொற்பொருள்களைத் தம் அச்சத்தான் அவர்க்கு ஏற்கச் சொல்லமாட்டாதார்; பல்லவை கற்றும் பயம் இலரே - பல நூல்களைக் கற்றாராயினும் உலகிற்குப் பயன்படுதல் இலர்.
விளக்கம்:
(அறிவார் முன் சொல்லாமையின் கல்வியுண்மை அறிவாரில்லை என்பதாம். இனிப் 'பயமிலர்' என்பதற்கு, 'கல்விப் பயனுடையரல்லர்' என்று உரைப்பாரும் உளர்.)


Manakkudavar

(இதன் பொருள்) பல நூல்களைக் கற்றாலும் ஒரு பயனில்லாதவரே; நல்லவையின் கண் நன்றாக அவர்க்கு ஏற்கச் சொல்லமாட்டாதார்,
(என்றவாறு). இஃது அவையஞ்சுவார் கற்ற கல்வி பிறர்க்குப் பயன்படாதென்றது.