Kural 727
குறள் 727
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்
pakaiyakaththup paetikai olvaal avaiyakaththu
anjsu mavankatrra nool
Shuddhananda Bharati
Like eunuch's sword in field, is vain
His lore who fears men of brain.
GU Pope
As shining sword before the foe which 'sexless being' bears,
Is science learned by him the council's face who fears.
The learning of him who is diffident before an assembly is like the shining sword of anhermaphrodite in the presence of his foes.
Mu. Varadarajan
அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் ஏந்திய கூர்மையான வாள் போன்றது.
Parimelalagar
பகையத்துப் பேடி கை ஔÿபுள்ளிÿவாள் - எறியப்படும் பகை நடுவண் அதனை அஞ்சும் பேடி பிடித்த கூர்வாளை ஒக்கும்; அவையகத்து அஞ்சுமவன் கற்ற நூல் - சொல்லப்படும் அவை நடுவண் அதனை அஞ்சுமவன் கற்ற நூல்.
விளக்கம்:
(பேடி: பெண் இயல்பு மிக்கு ஆண் இயல்பும் உடையவள். களமும் வாய்த்துத் தானும் நன்றாய் இருந்ததேயாயினும் பிடித்தவள் குற்றத்தால் வாள் சிறப்பின்றாயினாற் போல, அவையும் வாய்த்துத் தானும் நன்றாய் இருந்ததேயாயினும், கற்றவன் குற்றத்தால் நூல் சிறப்பின்றாயிற்று.)
Manakkudavar
(இதன் பொருள்) பசையிண்கண் அஞ்சுமவன் பிடித்த கூர்வாள் போலும்; அவை யின்கண் அஞ்சுமவன் கற்ற நூலும்,
(என்றவாறு). மேல் பயனில்லை யென்றார் இங்குப் பயனில்லாதவாறு காட்டினார்.