குறள் 726

அவையஞ்சாமை

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு

vaalotaen vankannar allaarkku noolotaen
nunnavai anjsu pavarkku


Shuddhananda Bharati

Courage before councils

To cowards what can sword avail
And books to those who councils fail?


GU Pope

Not to dread the Council

To those who lack the hero's eye what can the sword avail?
Or science what, to those before the council keen who quail?

What have they to do with a sword who are not valiant, or they with learning who are afraid of an intelligent assembly ?


Mu. Varadarajan

அஞ்சாத வீரர்‌ அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு? நுண்ணறிவுடையவரின்‌ அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு?


Parimelalagar

வன்கண்ணர் அல்லார்க்கு வாளொடு என் - வன்கண்மையுடையார் அல்லார்க்கு வாளொடு என்ன இயைபு உண்டு; நுண் அவை அஞ்சுபவர்க்கு நூலோடு என் - அது போல் நுண்ணியாரது அவையை அஞ்சுவார்க்கு நூலோடு என்ன இயைபு உண்டு ?
விளக்கம்:
(இருந்தாரது நுண்மை அவைமேல் ஏற்றப்பட்டது. நூற்கு உரியர் அல்லர் என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) வன்கண்ணரல்லாதவர்க்கு வாளினாற் பயனென்னை? அதுபோல், நுண்ணிய அவையின்கண் அஞ்சுவார்க்கு நூலினாற்பயனென்னை ?
(என்றவாறு). இது பிறர்க்குப் பயன் படாமையேயன்றித் தமக்கும் பயன்படாரென்றது.