குறள் 725

அவையஞ்சாமை

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு

aatrrin alavarindhthu katrka avaiyanjsaa
maatrrang koduththatr porutdu


Shuddhananda Bharati

Courage before councils

Grammar and logic learn so that
Foes you can boldly retort.


GU Pope

Not to dread the Council

By rule, to dialectic art your mind apply,
That in the council fearless you may make an apt reply.

In order to reply fearlessly before a foreign court, (ministers) should learn logic according to the rules (of grammar).


Mu. Varadarajan

அவையில்‌ (ஒன்றைக்‌ கேட்டவர்க்கு) அஞ்சாது விடை கூறும்‌ பொருட்டாக நூல்களைக்‌ கற்கும்‌ நெறியில்‌ அளவை நூல்‌ அறிந்து கற்க வேண்டும்‌.


Parimelalagar

ஆற்றின் அளவு அறிந்து கற்க - சொல்லிலக்கண நெறியானே அளவை நூலை அமைச்சர் உட்பட்டுக் கற்க; அவை மாற்றம் கொடுத்தற்பொருட்டு - வேற்றுவேந்தர் அவையிடை அஞ்சாது அவர் சொல்லிய சொற்கு உத்தரஞ்சொல்லுதற் பொருட்டு.
விளக்கம்:
(அளவை நூல், சொல் நூல் கற்றே கற்க வேண்டுதலின், அதற்கு அஃது ஆறு எனப்பட்டது. அளக்கும் கருவியை 'அளவு' என்றார். ஆகுபெயரான், அவர் சொல்லை சொல்வதொரு சொல் சொல்லலாவது, நியாயத்து வாதசற்ப விதண்டைகளும் சலசாதிகளும் முதலிய கற்றார்க்கே ஆகலின், அவற்றைப் பிழையாமல் கற்க என்பதாம். இதனான் அதன் காரணம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக, நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும்,
(என்றவாறு). நூல் கற்றலாவது (1) மெய்யாராய்ச்சியாகிய நூலைக் கற்றலும், (2) வேதமும் ஆகமமும் கற்றலும், (3) உழவும் வாணிகமும் கற்றலும், (4) படை வழங்கல் மநுநீதி முதலியன கற்றலுமென நான்கு வகைப்படும்.