Kural 724
குறள் 724
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்
katrraarmun katrra selachsollith thaamkatrra
mikkaarul mikka kolal
Shuddhananda Bharati
Impress the learned with your lore
From greater savants learn still more.
GU Pope
What you have learned, in penetrating words speak out before
The learn'd; but learn what men more learn'd can teach you more.
(Ministers) should agreeably set forth their acquirements before the learned and acquire more(knowledge) from their superiors (in learning).
Mu. Varadarajan
கற்றவரின்முன் தாம் கற்றவைகளை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம் மிகுதியான கல்வியை அறிந்து கொள்ள வேண்டும்.
Parimelalagar
கற்றார்முன் கற்றசெலசொல்லி - பல நூல்களையும் கற்றார் அவைக்கண் தாம்கற்றவற்றை அவர்மனம் கொள்ளுமாற்றாற் சொல்லி; தாம் கற்ற மிக்க மிக்காருள் கொளல் - அவற்றின் மிக்க பொருள்களை அம்மிக்க கற்றாரிடத்து அறிந்து கொள்க. எல்லாம் ஒருவற்குக் கற்றல் கூடாமையின்,
விளக்கம்:
(வேறு வேறாய கல்வியுடையார் பலர் இருந்த அவைக்கண் தாம் கற்றவற்றை அவர்க்கு ஏற்பச் சொல்லுக; சொல்லவே, அவரும் அவையெல்லாம் சொல்லுவர் ஆகலான், ஏனைக் கற்க பெறாதன கேட்டறியலாம் என்பதாயிற்று. அதனால் அவனது ஒருசார் பயன் கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) தாம் கற்றதனைக் கற்றவர் முன்பு இசையச் சொல்லி, தாம் கற்ற தினும் மிகக் கற்றார்மாட்டு அவர் மிகுதியாகக் கூறும் பொருளைக் கேட்டுக்கொள் ளுதல் அவையஞ்சாமையாவது,
(என்றவாறு).