குறள் 723

அவையஞ்சாமை

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்

pakaiyakaththuch saavaar yeliyar ariyar
avaiyakaththu anjsaa thavar


Shuddhananda Bharati

Courage before councils

Many brave foes and die in fields
The fearless few face wise councils.


GU Pope

Not to dread the Council

Many encountering death in face of foe will hold their ground;
Who speak undaunted in the council hall are rarely found.

Many indeed may (fearlessly) die in the presence of (their) foes; (but) few are those who are fearless in the assembly (of the learned).


Mu. Varadarajan

பகைவர்‌ உள்ள போரக்களத்தில்‌ (அஞ்சாமல்‌ சென்று) சாகத்‌ துணிந்தவர்‌ உலகத்தில்‌ பலர்‌; கற்றவரின்‌ அவைக்‌ களத்தில்‌ அஞ்சாமல்‌ பேசவல்லவர்‌ சிலரே.


Parimelalagar

பகையகத்துச் சாவார் எளியர் - பகையிடை அஞ்சாது புக்குச் சாவவல்லார் உலகத்துப் பலர்; அவையகத்து அஞ்சாதவர் அரியர் - அவையிடை அஞ்சாது புக்குச் சொல்ல வல்லார் சிலர்.
விளக்கம்:
('அஞ்சாமை,' 'சாவார்' என்பதனோடும் கூட்டி, அதனால் 'சொல்ல வல்லார்' என்பது வருவித்து உரைக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் அவை அஞ்சாரது சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பகையின்கண் அஞ்சாது நின்று சாவார் பெறுதற்கு எளியர் : அவையின்கண் அஞ்சாது சொல்லவல்லவர் அறிதற்கு அரியர்,
(என்றவாறு). இஃது அவையஞ்சாமை அரிதென்றது.