Kural 721
குறள் 721
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்
vakaiyarindhthu vallavai vaaichoraar sollin
thokaiyarindhtha thooimai yavar
Shuddhananda Bharati
The pure fail not in power of words
Knowing grand council's moods and modes.
GU Pope
Men, pure in heart, who know of words the varied force,
The mighty council's moods discern, nor fail in their discourse.
The pure who know the classification of words having first ascertained the nature (of the court) will not (through fear) falter in their speech before the powerful body.
Mu. Varadarajan
சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர் அவைக்களத்தின் வகையினை அறிந்து வல்லவரின் அவையில் வாய் சோர்ந்து பிழை சொல்லமாட்டார்.
Parimelalagar
வகை அறிந்து வல்லவை வாய் சோரார் - கற்றுவல்ல அவை, அல்லா அவை என்னும் அவை வகையினை அறிந்து, வல்ல அவைக்கண் ஒன்று சொல்லுங்கால் அச்சத்தான் வழுப்படச் சொல்லார்; சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர் - சொல்லின் தொகையெல்லாம் அறிந்த தூய்மையினை உடையார்.
விளக்கம்:
(இருந்தாரது வன்மை அவைமேல் ஏற்றப்பட்டது. 'வல்லவை' என்பதற்கு, 'தாம் கற்றுவல்ல நூற்பொருள்களை' என்று உரைப்பாரும் உளர். 'அச்சத்தான்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'சொல்லின் தொகை,' 'தூய்மை' என்பவற்றிற்கு (குறள் 711) மேல் உரைத்தாங்கு உரைக்க.)
Manakkudavar
அவையஞ்சாபையாவது அவையின்கண் அஞ்சாமற் சொல்லுதல் அஞ்சாது சொல்லுதல் வேண்டுமாதலின், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) தப்பினால் வருங் குற்றவகையை யறிந்து, கற்று வல்ல அவை யின்கண் அஞ்சுதலால் சோர்வுபடச் சொல்லார், சொற்களின் தொகுதியை யறிந்த தூய்மையுடையவர்,
(என்றவாறு). இது மேற்கூறிய வாற்றால் கற்றவர் தப்பச் சொல்லாரென்று அக்கல்வி யால் வரும் பயன் கூறிற்று. அமைச்சியல் முற்றிற்று.