குறள் 720

அவையறிதல்

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்

angkanaththul ukka amilthatrraal thangkanaththaar
allaarmun koatti kolal


Shuddhananda Bharati

Judging the audience

To hostiles who wise words utters
Pours ambrosia into gutters.


GU Pope

The Knowledge of the Council Chamber

Ambrosia in the sewer spilt, is word
Spoken in presence of the alien herd.

To utter (a good word) in the assembly of those who are of inferior rank is like dropping nectar on the ground.


Mu. Varadarajan

தம்‌ இனத்தவர்‌ அல்லாதவரின்‌ கூட்டத்தின்முன்‌ ஒரு பொருள்‌ பற்றிப்‌ பேசுதல்‌, தூய்மையில்லாத முற்றத்தில்‌ சிந்திய அமிழ்தம்‌ போன்றது.


Parimelalagar

தம் கணத்தார் அல்லார் முன் கோட்டி கொளல் - நல்லார் தம்மினத்தரல்லாதார் அவைக்கண் ஒன்றனையும் சொல்லற்க; அங்கணத்துள் உக்க அமிழ்தற்று - சொல்லின், அது தூய்தல்லாத முற்றத்தின்கண் உக்க அமிழ்தனை ஒக்கும். ('கொள்' என்னும் முதனிலைத் தொழிற்பெயர் முன்னின்று பின் எதிர்மறை அல்விகுதியோடு கூடி 'மகன் எனல்'
விளக்கம்:
(குறள் 196) என்பது போல நின்றது. 'சொல்லின்,' 'அது' என்பன அவாய் நிலையான் வந்தன. பிறரெல்லாம் 'கொளல்' என்பதனைத் தொழிற் பெயராக்கி உரைத்தார்; அவர் அத்தொழில் அமிழ்து என்னும் பொருள் உவமையொடு இயையாமை நோக்கிற்றிலர். சாவா மருந்தாதல் அறிந்து நுகர்வார் கையினும் படாது அவ்வங்கணத்துக்கும் இயைபு இன்றிக் கெட்டவாறு தோன்ற, 'உக்க அமிழ்து' என்றார். அச்சொல் பயனில் சொல்லாம் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் தாழ்ந்தார் அவைக்கண் ஒரு வழியும் சொல்லற்க என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) அங்கணத்தின்கண் உக்க அமுதம் போல் இகழப்படுவர்; தம் முடைய இனத்தாரல்லாதார் முன்னர் ஒன்றைச் சொல்லுவாராயின்,
(என்றவாறு). கல்வியுடையார் புல்லவையுள் சொன்னால் உளதாகுங் குற்றமென்னை யென்றார்க்கு , இது இகழப்படுவரென்று கூறிற்று.