குறள் 719

அவையறிதல்

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசெலச் சொல்லு வார்

pullavaiyul pochsaandhthum sollatrka nallavaiyul
nankuselach sollu vaar


Shuddhananda Bharati

Judging the audience

O ye who speak before the keen
Forgetful, address not the mean.


GU Pope

The Knowledge of the Council Chamber

In councils of the good, who speak good things with penetrating power,
In councils of the mean, let them say nought, e'en in oblivious hour.

Those who are able to speak good things impressively in an assembly of the good should not even forgetfully speak them in that of the low


Mu. Varadarajan

நல்ல அறிஞரின்‌ அவையில்‌ நல்ல பொருளை மனத்தில்‌ பதியுமாறு சொல்லவல்லவர்‌, அறிவில்லாதவரின்‌ கூட்டத்தில்‌ மறந்தும்‌ பேசக்கூடாது.


Parimelalagar

நல்லவையுள் நன்கு செலச் சொல்லுவார் - நல்லார் இருந்த அவைக்கண் நல்ல பொருள்களை அவர் மனங்கொள்ளச் சொல்லுதற்குரியார்; புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க - அவையறியாத புல்லர் இருந்த அவைக்கண் அவற்றை மறந்தும் சொல்லாதொழிக.
விளக்கம்:
(சொல்லின், தம் அவையறியாமையை நோக்கி நல்லவையும், பொருளறியாமையால் புல்லவைதானும் இகழ்தலின், இரண்டு அவைக்கும் ஆகா என்பது கருதிப் 'பொச்சாந்தும் சொல்லற்க' என்றார்.)


Manakkudavar

(இதன் பொருள்) புல்லியவரிருந்த அவையின் கண் மறந்துஞ் சொல்லாதொழிக; நல்லவரிருந்த அவையின்கண் நல்லதனை இசையச் சொல்லவல்லார், (எ-று).