குறள் 717

அவையறிதல்

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து

katrrarindhthaar kalvi vilangkum kachadarach
solthaerithal vallaar akaththu


Shuddhananda Bharati

Judging the audience

The learning of the learned shines
Valued by flawless scholar-minds.


GU Pope

The Knowledge of the Council Chamber

The learning of the learned sage shines bright
To those whose faultless skill can value it aright.

The learning of those who have read and understood (much) will shine in the assembly of those who faultlessly examine (the nature of) words.


Mu. Varadarajan

குற்றமறச்‌ செயல்களை ஆராய்வதில்‌ வல்ல அறிஞரிடத்தில்‌, பல நூல்களையும்‌ கற்றறிந்தவரின்‌ கல்வியானது நன்றாக விளங்கித்‌ தோன்றும்‌.


Parimelalagar

கசடு அறச்சொல் தெரிதல் வல்லாரகத்து - வழுப்படாமல் சொற்களை ஆராய்தல் வல்லார் அவைக்கண் சொல்லின்; கற்று அறிந்தார் கல்வி விளங்கும் - பல நூல்களையும் கற்று அவற்றின் ஆய பயனை அறிந்தாரது கல்வி யாவர்க்கும் விளங்கித் தோன்றும்.
விளக்கம்:
('சொல்லின்' என்பது அவாய் நிலையான் வந்தது. ஆண்டே சொல்லுக என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) நூல்களைக் கற்று, அதன் பயனும் அறிந்துள்ளாரது கல்வி விளங் காநிற்கும், குற்றமறச் சொற்களைச் சொல்லவல்லார் முன்னர்ச் சொல்லின், (எ-று). இது கல்வியின் விழுப்பம் கற்றார்க்கல்லது பிறர்க்கு அறிதலரிதென்றது.