குறள் 714

அவையறிதல்

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்

oliyaarmun olliya raathal vaeliyaarmun
vaansuthai vannam kolal


Shuddhananda Bharati

Judging the audience

Before the bright be brilliant light
Before the muff be mortar white.


GU Pope

The Knowledge of the Council Chamber

Before the bright ones shine as doth the light!
Before the dull ones be as purest stucco white!

Ministers should be lights in the assembly of the enlightned, but assume the pure whiteness ofmortar (ignorance) in that of fools.


Mu. Varadarajan

அறிவிற்‌ சிறந்தவரின்முன்‌ தாமும்‌ அறிவிற்‌ சிறந்தவராய்ப்‌ பேச வேண்டும்‌; அறிவில்லாதவர்‌ முன்‌ தாமும்‌ வெண்‌ சுண்ணம்போல்‌ அறிவில்லாதவராய்‌ இருக்க வேண்டும்‌.


Parimelalagar

ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல் - அறிவால் ஔÿபுள்ளிÿளியாரவைக் கண் தாமும் ஒள்ளியாராக; வெளியார் முன் வான்சுதை வண்ணம் கொளல் - ஏனை வெள்ளைகள் அவைக்கண் தாமும் வாலிய கதையின் நிறத்தைக் கொள்க.
விளக்கம்:
(ஒள்ளியார் என்றது மிக்காரையும் ஒத்தாரையும். அது விகாரத்தால் ஒளியார் என்று நின்றது. ஒள்ளியராதல்: தம் நூலறிவுஞ் சொல்வன்மையும் தோன்ற விரித்தல். அவை அறியாத புல்லரை வெளியார்' என்றது. வயிரம் இல் மரத்தை வெளிறு' என்னும் வழக்குப்பற்றி. அவர் மதிக்கும் வகை அவரிலும் வெண்மையுடையராக என்பார், 'வான் சுதை வண்ணம் கொளல்' என்றார். அவையளவு அறிந்தார் செய்யும் திறம் இதனான் தொகுத்துக் கூறப்பட்டது. பின்னர் விரித்துக் கூறுப.) )


Manakkudavar

(இதன் பொருள்) ஒள்ளிய அறிவுடையார் முன்பு தாமும் ஒள்ளிய அறிவுடையா ராயிருத்தலும், வெள்ளிய அறிவுடையார் முன்பு வாலிய சுதை வண்ணம் போன்ற வெண்மையைக் கொண்டிருத்தலும், அவை யறிதலாவது,
(என்றவாறு).