Kural 712
குறள் 712
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்
itaithaerindhthu nankunarndhthu solluka sollin
nataithaerindhtha nanmai yavar
Shuddhananda Bharati
Who know the art of speech shall suit
Their chosen words to time in fact.
GU Pope
The Knowledge of the Council Chamber
Good men to whom the arts of eloquence are known,
Should seek occasion meet, and say what well they've made their own.
Let the good who know the uses of words speak with a clear knowledge after ascertaining the time(suited to the court).
Mu. Varadarajan
சொற்களின் நடையை ஆராய்ந்த நன்மை உடையவர், அவையின் செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்.
Parimelalagar
சொல்லின்நடை தெரிந்த நன்மையவர் - சொற்களின் நடையினை ஆராய்ந்தறிந்த நன்மையினையுடையார்; இடைதெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக - அவைக்கண் ஒன்று சொல்லுங்கால் அதன் செவ்வியை ஆராய்ந்து அறிந்து வழுப்படாமல் மிகவும் தௌ¢ந்து சொல்லுக.
விளக்கம்:
(சொற்களின் நடையாவது: அம்மூவகைச் சொல்லும் செம்பொருள்; இலக்கணைப் பொருள் குறிப்புப் பொருள் என்னும் பொருள்களைப் பயக்குமாறு. செவ்வி; கேட்டற்கண் விருப்புடைமை. வழு: சொல் வழுவும் பொருள் வழுவும். (இவை இரண்டு பாட்டானும் ஒன்று சொல்லுங்கால் அவையறிந்தே சொல்ல வேண்டும் என்பது கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) சொன்னால் அதற்கு வருங்குற்றத்தை ஆராய்ந்து, நன்மையா மவற்றை யறிந்து, சொல்லுக; சொல்லினது வழக்காராய்ந்த நன்மையுடையார். இஃது ஆராய்ந்து சொல்லுமாறு கூறிற்று.