குறள் 711

அவையறிதல்

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்

avaiyarindhthu aaraaindhthu solluka sollin
thokaiyarindhtha thooimai yavar


Shuddhananda Bharati

Judging the audience

The pure in thought and eloquence
Adapt their words to audience.


GU Pope

The Knowledge of the Council Chamber

Men pure in heart, who know of words the varied force,
Should to their audience known adapt their well-arranged discourse.

Let the pure who know the arrangement of words speak with deliberation after ascertaining (the nature of) the court (then assembled).


Mu. Varadarajan

சொற்களின்‌ தொகுதி அறிந்த தூய்மை உடையவர்‌, அவைக்களத்தின்‌ தன்மை அறிந்து ஏற்ற சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும்‌.


Parimelalagar

சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர் - சொல்லின் குழுவினை அறிந்த தூய்மையினையுடையார்; அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக - தாமென்று சொல்லுங்கால் அப்பொழுதை அவையினை அறிந்து ஆராய்ந்து சொல்லுக.
விளக்கம்:
(சொல்லின் குழுவெனவே, செஞ்சோல், இலக்கணச் சொல், குறிப்புச்சொல் என்னும் மூவகைச் சொல்லும் அடங்கின. தூய்மை: அவற்றுள் தமக்காகாதன ஒழித்து ஆவன கோடல். அவை என்றது ஈண்டு அதன் அளவை. அது மிகுதி, ஒப்பு, தாழ்வு என மூவகைத்து. அறிதல், தம்மொடு தூக்கி அறிதல். ஆராய்தல்: இவ்வவைக்கண் சொல்லும் காரியம் இது, சொல்லுமாறு இது, சொன்னால் அதன் முடிவு இது என்று, இவை உள்ளிட்டன ஆராய்தல்.)


Manakkudavar

அவையறிதலாவது இருந்த அவை யறிந்து அதற்குத் தக்க சொல்லுதல். அரசன் குறிப்பறிந்தாலும் அவையறிந்து சொல்லவேண்டு மாதலின், அதன் பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) இருந்த அவை யறிந்தாரை யறிந்து, அதற்குத்தக்க சொல்லின் திறத்தை ஆராய்ந்து, சொல்லுக ; சொல்லின் தொகுதியை யறிந்த தூய்மையை யுடையவர்,
(என்றவாறு) தொகையறிதல் - திறனறிதல். இது அவையறிந்து சொல்லல் வேண்டும் மென்றது.