குறள் 686

தூது

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது

katrrukkan anjsaan selachsollik kaalaththaal
thakkathu arivathaam thoothu


Shuddhananda Bharati

The embassy

Learned; fearless, the envoy tends
Convincing words which time demands.


GU Pope

The Envoy

An envoy meet is he, well-learned, of fearless eye
Who speaks right home, prepared for each emergency.

He is an ambassador who having studied (politics) talks impressively, is not afraid of angry looks,and knows (to employ) the art suited to the time.


Mu. Varadarajan

கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல்‌, கேட்பவர்‌ உள்ளத்தில்‌ பதியுமாறு சொல்லி, காலத்திற்குப்‌ பொருத்தமானதை அறிகின்றவனே தூதன்‌.


Parimelalagar

கற்று- நீதி நூல்களைக் கற்று; செலச் சொல்லி - தான் சென்ற கருமத்தைப் பகை வேந்தர் மனங்கொளச் சொல்லி; கண் அஞ்சான் - அவன் செயிர்த்து நோக்கின் அந்நோக்கிற்கு அஞ்சாது; காலத்தால் தக்கது அறிவது தூதாம் - காலத்தோடு பொருந்த அது முடிக்கத்தக்க உபாயம் அறிவானே தூதனாவான்.
விளக்கம்:
[அவ்வுபாயம் அறிதற் பொருட்டு நீதி நூற்கற்வியும், அதனானன்றிப் பிறிதொன்றான் முடியுங்காலம் வரின் அவ்வாறு முடிக்கவேண்டுதலின் காலத்தால் தக்கது அறிதலும், இலக்கணமாயின.]


Manakkudavar

(இதன் பொருள்) தன்னரசன் சொன்ன மாற்றத்தைச் சொல்லுங்கால் பகையரசன் வெகுண்டானாயின் அது மாற்று தற்காம் உபாயத்தைக் கற்று, எவ்விடத்தினும் அஞ்சுதலின்றி, மகிழ்ச்சி வருமாறு இசையச் சொல்லி, நாளோடே கூடச் செய்யத் தகுவன அறிந்து சொல்ல வல்லவன் தூதனாவான்,
(என்றவாறு)