குறள் 685

தூது

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது

thokachsollith thoovaatha neekki nakachsolli
nanri payappathaandh thoothu


Shuddhananda Bharati

The embassy

Not harsh, the envoy's winsome ways
Does good by pleasant words concise.


GU Pope

The Envoy

In terms concise, avoiding wrathful speech, who utters pleasant word,
An envoy he who gains advantage for his lord.

He is an ambassador who (in the presence of foreign rulers) speaks briefly, avoids harshness, talksso as to make them smile, and thus brings good (to his own sovereign).


Mu. Varadarajan

பலவற்றைத்‌ தொகுத்துச்‌ சொல்லியும்‌, அவற்றுள்‌ பயனற்றவைகளை நீக்கியும்‌, மகிழுமாறு சொல்லியும்‌ தன்‌ தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன்‌ தூதன்‌.


Parimelalagar

தொகச் சொல்லி - வேற்றரசர்க்குப் பல காரியங்களைச் சொல்லும் வழிக் காரணவகையால் தொகுத்துச் சொல்லியும்; தூவாத நீக்கி நகச் சொல்லி - இன்னாத காரியங்களைச் சொல்லும் வழி வெய்ய சொற்களை நீக்கி இனிய சொற்களான் மனமகிழச் சொல்லியும்; நன்றி பயப்பது தூதுஆம் - தன்னரசனுக்கு நன்மையைப் பயப்பவனே தூதனாவான்.
விளக்கம்:
[பல காரியங்கட்கு உடம்படாதார் பரம்பரையான் அவற்றிற்குக் காரணமாயது ஒன்றைச் சொல்ல அதனால் அவை விளையுமாறு உய்த்துணர அருமையானும் சுருக்கத்தானும் உடம்படுவர்: இன்னாதவற்றிற்கு உடம்படாதார் தம் மனம் மகிழச் சொல்ல, இவ்வின்னாமை காணாது உடம்படுவராதலின், அவ்விருவாற்றானும் தன் காரியம் தவறாமல் முடிக்க வல்லான் என்பதாம். எண்ணும்மைகள், விகாரத்தால் தொக்கன.]


Manakkudavar

(இதன் பொருள்) சுருங்கச் சொல்லி, விரும்பாத சொற்களை நீக்கி, மகிழுமாறு சொல்லி, தன்னரசனுக்கு நன்மையைத் தருமவன் தூதனாவான்.
(என்றவாறு) இது சொல்லுமாறு கூறிற்று.